சமூக வலைதளத்தில் ப்ளாக் செய்த பெண்ணை மிரட்டிய காசி !! பரவும் ஆடியோ

Webdunia
வெள்ளி, 8 மே 2020 (16:15 IST)
சமூக வலைதளங்களில் தன்னை ப்ளாக் செய்த பெண்களை கசி செல்போன் மூலம் மிரட்டுவது போன்ற ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளைத் தொடங்கிய காசி என்பவர், பல பெண்களிடம் பேசி பண மோசடியில் ஈடுப்பட்டதாக சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் காசி மீது ஒரு புகார் அளித்தார்.

இதனடிப்படையில் புகாரைப் பதிவு செய்த போலீசார், பின்னர் பெண்கள் அடுத்தடுத்து அளித்த  புகாரின் அடிப்படையில்  காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். இதுவரை காசி மீது 5 பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில், தற்போது ப்ரு பெண் ஆன்லைன் மூலம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில், காசி மற்றும் அவரது நண்பர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளன்ர்.
இந்நிலையில், காசி பெண்களை செலோனில் மிரட்டுவது போன்ற ஒரு ஆடியோ தற்போது பரவலாகி வருகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணீ மேற்கொள்ள வுள்ளதக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்