கருப்பு பூஞ்சை தொற்று… கடலூரில் 4 பேர் பலி!

Webdunia
வியாழன், 27 மே 2021 (12:47 IST)
தமிழகத்தில் பரவி வரும் கருப்பு பூஞ்சை தொற்றால் கடலூர் மாவட்டத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையால் நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில் தமிழகத்திலும் இந்த பூஞ்சை தொற்று பரவலாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 4 பேர் பலியாகியுள்ளனர். கடலூர் சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், பண்ருட்டி தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (54), வேப்பூர் ராமாபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் (55), சேத்தியாதோப்பு மீனா (45) ஆகிய நான்கு பேர் இதுவரை சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர். இவர்களுக்கெல்லாம் மற்ற இணை நோய்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்