பாஜக ஸ்கெட்ச் என்ன? தமிழகத்தின் 18 மாவட்டங்கள் டார்கெட்...

Webdunia
சனி, 9 நவம்பர் 2019 (15:01 IST)
பாஜக, தமிழகத்தில் 18 மாவட்டங்களில் புதிய கட்சி அலுவலகங்களை திறக்க இருப்பதாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் தெரிவித்துள்ளார்.
 
பாஜக  மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், தமிழ்நாட்டில் தஞ்சாவூர், ராமநாதபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கட்சி அலுவலகங்களை தொடங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளார். 
 
இந்த அலுவலகங்களில் கான்ஃபெரன்ஸ் அறை, ஒய்வு அறைகள் மற்றும் பட்டறைகள் ஆகிய வசதிகள் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாம்பலத்தில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு அருகே புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா வருகை தர உள்ளார் எனவும் தெரிகிறது. 
 
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிக்கு புதிய அலுவலகங்களை தொடங்குவதனால், அந்தந்த மாவட்டங்களில் எளிதாக கட்சி பணிகளை குறித்து விவாதிக்க முடியும் என இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்