அயோத்தி தீர்ப்பு, பாஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி - காங்கிரஸ்!

சனி, 9 நவம்பர் 2019 (12:44 IST)
அயோத்தி தீர்ப்பின் மூலம் பாஜக போன்ற கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியலாக்குவதற்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். 
 
அயோத்தி வழக்கின் தீர்ப்பு நவம்பர் 14 அல்லது 15 ஆம் தேதி வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு என நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக தீர்ப்பை வழங்கினர். 
 
நிலத்தின் முற்றத்தை இந்துக்கள் தங்கள் வசம் வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அயோத்தி நிலம் ராம்லல்லா அமைப்பிற்கே சொந்தம். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் ஹிந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளது. 
 
அதோடு, இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும், சன்னி வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு, உத்தரபிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
இந்நிலையில் அயோத்தி தீர்ப்பை பல அரசியல் கட்சியினர் வரவேற்றுள்ள நிலையில், அயோத்தியில் சர்ச்சைக்குள்ளான இடத்தில் கோயில் கட்டும் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இந்த தீர்ப்பானது கோயில் கட்ட வழிவகுத்ததோடு, பாஜக போன்ற கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியலாக்குவதற்கும் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என காங்கிரச் கட்சியின் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்