என்னதான் நடக்கும்? இதுதான் நடக்கும்!- போலீஸில் சிக்கிய அஜித்!

சனி, 9 நவம்பர் 2019 (14:20 IST)
கடலூரில் அரசு பேருந்தை மறித்து டிக்டாக் செய்த இளைஞர் போலீஸால் கைது செய்யப்பட்டார்.

விஜய் நடித்து சமீபத்தில் வெளியான பிகில் திரைப்படத்தில் “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” என்ற எம்.ஜி.ஆர் பாடலை விஜய் பாடுவதாக ஒரு காட்சி இருக்கும். தற்போது இந்த பாடலுக்கு பலரும் டிக்டாக் வீடியோக்கள் செய்து பரவலாக வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கடலூர் அருகே திட்டக்குடியை சேர்ந்த இளைஞர் அஜித் நடுரோட்டில் பைக்கை நிறுத்தி அதன்மீது படுத்தவாறு இந்த பாடலை பாடி டிக்டாக் செய்துள்ளார். பின்னால் அரசு பேருந்து மற்றும் மற்ற வாகனங்கள் வந்தும் அவற்றிற்கு வழி விடாமல் டிக்டாக் செய்துள்ளார்.

அவர் செய்த டிக்டாக் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து காவல்துறை அவரை கைது செய்தது. விசாரணையில் பைக்கை ஓட்டிக்கொண்டே டிக்டாக் செய்வது போன்ற அபாயகரமான செயல்களிலும் அவர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதை தொடர்ந்து அஜித் மீது இரண்டு பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்