மன்னிப்பு கேட்பீர்களா திருமாவளவன்? பாஜக நாராயணன் திருப்பதி கேள்வி

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (22:34 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்த தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று இந்தியாவில் 100 கோடி பெயர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு பெரும் சாதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆரம்பத்தில் தடுப்பு ஊசி செலுத்தப்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருமாவளவன் தற்போது மன்னிப்பு கேட்பாரா என பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
நடிகர் விவேக் தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்று மக்களை அச்சப்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்வதை தடுக்க முயன்ற திருமாவளவன்  அவர்களே, இன்று நூறு கோடி தடுப்பூசியை செலுத்தியுள்ளது இந்தியா. நீங்கள் அன்று சொன்னதற்கு இன்று மன்னிப்பு கேட்பீர்களா? என கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்