#எக்ஸல்சீட்டு_அண்ணாமலை: டிவிட்டரில் கலாய்!

வியாழன், 21 அக்டோபர் 2021 (10:22 IST)
#எக்ஸல்சீட்டு_அண்ணாமலை என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

 
மின் துறையில் ஊழல் நடந்ததாக ஆதாரத்துடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டிய நிலையில் இதற்கு பதிலளித்துள்ளார் செந்தில்பாலாஜி. அவர் கூறியதாவது, மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென திரு.அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும், அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல், All purpose அதிமேதாவியாக எண்ணி, 4% கமிஷனென மீண்டும் பொய் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பார்க்கும் அண்ணாமலை இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும். இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து #எக்ஸல்சீட்டு_அண்ணாமலை என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இணையவாசிகள் இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பாஜகவையும் அண்ணாமலையையும் கிண்டலடித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்