செந்தில் பாலாஜி ராஜினாமாவுக்கு பின் பாஜகவா? திமுக தலைமை அதிர்ச்சி..!

Siva
புதன், 14 பிப்ரவரி 2024 (08:24 IST)
அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததற்கு திமுக தலைமை பின்னால் இல்லை என்றும் பாஜக தான் பின்னால் இருக்கிறது என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மீண்டும் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் தான் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டதால் அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது

ஆனால் அதே நேரத்தில் இது ஒன்று மட்டுமே செந்தில் பாலாஜி ராஜினாமாவுக்கு காரணம் இல்லை என்றும் அவரை பாஜக பின்புறம் இருந்து இயக்கி வருவதாகவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே சில அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஒருவேளை அவர் ஜாமீனில் வெளிவந்தாலும் மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் அமலாக்க துறையில் ஆஜராகும் வரை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் இன்னொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்