விவசாயிகள் தாக்கப்படும்போது நாடு எப்படி முன்னேறும்?- மம்தா பானர்ஜி

Sinoj

செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (19:05 IST)
தலைநகர்  நோக்கிச் செல்லும் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்படுவதற்கு மே.வ., முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், எம்.எஸ்.சுவாமி நாதன் ஆணையத்தின் அறிக்கையின்படி, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க புதியசட்டம் இயற்றப்பட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளிய வலியுறுத்தி  போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
 
இந்த நிலையில், டெல்லியை  நோக்கி விவசாயிகள் முன்னேறிவரும் நிலையில், சில எல்லைகளில் கான்கிரிட், இரும்பு தடுப்புகளை ஒன்றுசேர்த்து, அகற்றி டெல்லியை   நோக்கிச் சென்றுகொண்டுள்ளனர்.
 
அதேபோல், அம்பாலா எல்லையில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி வரும்  நிலையில்,  முகக் கவசம் அணிந்தபடி, விவசாயிகள் டிராக்டரில் செல்கின்றனர்.
 
இந்த  நிலையில், அடிப்படை உரிமைகளுக்காக போராடியதற்காக  கண்ணீர் புகைகுண்டுகளால் விவசாயிகள் தாக்கப்படும்போது நாடு எப்படி முன்னேறும் என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
 
விவசாயிகளின் எதிர்ப்பை அடக்குவதற்குப் பதிலாக நமது தேசத்திற்கு தீங்கு விளைவித்த அதிகார வெறி மற்றும் ஆட்சியின்மை ஆகியவற்றை தாழ்த்துவதில் பாஜக கவனம் செலுத்த வேண்டும். அரசின் அடாவடி நடவடிக்கைகளுக்கு எதிராக நமது விவசாயிகளுடன் ஒற்றுமையாக நிற்போம் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும்,விவசாயிகள் மீது பாஜகவினர் நடத்திய கொடூரத் தாக்குதல் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்