6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியிலேயே வங்கிக்கணக்கு.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

Siva
செவ்வாய், 5 மார்ச் 2024 (08:56 IST)
6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளியிலே வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 2024-25 கல்வியாண்டில் சேரும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதிய வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவ மாணவிகளுக்கு கிடைக்கும் உதவி தொகைகள் அந்த வங்கி கணக்கு மூலம் நேரடியாக பரிவர்த்தனை செய்யப்படும் என்றும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் எளிமைப்படுத்தும் வகையில் 6 ஆம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு பள்ளி மூலம் வங்கி கணக்கு தொடங்கும் வசதி தற்போது உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

6 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போதே வங்கி கணக்கு விவரங்களையும் குறிப்பிடலாம் என்றும் இதனால் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு பணம் வந்து சேரும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்