சோபியாவிற்கு ஜாமீன் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (12:26 IST)
பாஜகவை விமர்சித்ததற்காக தூத்துக்குடி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட சோபியாவிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
சென்னையில் இருந்து தூத்துகுடிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் விமானத்தில் சென்றபோது 'பாசிச பாஜக ஒழிக' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மாணவி ஷோபியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இதனையடுத்து சோபியாவின் ஜாமீன் மனுவை அவரது தந்தை சாமி என்பவர் தூத்துகுடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சற்றுமுன் நடந்தபோது இந்த மனு இன்று மதியம் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக நீதிபதி அறிவித்தார். 
 
இந்நிலையில் 12 மணிக்கு ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, சோபியாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இன்னும் அரை மணி நேரத்தில் அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்