அரசு நிர்ணயித்த விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா ? உயர்நீதிமன்றம்

Webdunia
புதன், 27 மே 2020 (21:34 IST)
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில்  அதிக விலைக்கு மதுபானங்களை விற்பதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் மாவட்ட ஜாரி கொண்டலப்பட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் குல்லு படையாச்சி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று, அரசு நிர்ணயித்த எம்.ஆர்.பி விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா ? மதுபானங்கள் விற்கும்போது ரசீதுகள் வழங்கப்படுகிறதா?  தமிழகத்தில் உள்ள ஓவ்வொரு மதுக்கடையிலும்   நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என பல கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். மேலும் வரும் ஜூன் மாதம் 25 ஆம் தே4தி இதுதொடர்பாக அறிக்கை அளிக்க   வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு நீதிபதி விசாரணையை தள்ளி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்