கலைஞரின் நிழலாக இருந்தவர்.. ஆற்காடு வீராசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர்..

Siva
ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (10:11 IST)
திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அந்த வாழ்த்தில் அவர் கூறியிருப்பதாவது..

தலைவர் கலைஞரின் நிழலாக இருந்தவர் அண்ணன் ஆர்க்காட்டார்! உடல்நலன் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை கழகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கழகப் பற்றாளர். எனது வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உடனிருந்து வழிநடத்திய பண்பாளர்;

என்றும் மானமிகு உடன்பிறப்பு மரியாதைக்குரிய அண்ணன் ஆர்க்காட்டார் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

ஆற்காடு வீராசாமி  தமிழ்நாடு மின்சார துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க காலம் முதல் முக்கிய பங்கு வகித்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 1967 முதல் 2006 வரை 8 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்