தம்பி ஏஆர் ரஹ்மான் முதலில் இதை செய்யட்டும்: பாஜக பிரமுகர்

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (08:30 IST)
தமிழை இணைப்பு மொழியாக மாற்றுவோம் என்று கூறும் ஏஆர் ரகுமான் முதலில் தனது குடும்பத்தாரின் பெயர்களை தமிழுக்கு மாற்றட்டும் என்று பாஜக பிரமுகர் எஸ் ஆர் சேகர் தெரிவித்துள்ளார் 
 
இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழை மாற்ற வேண்டும் என்றும் தமிழணங்கு என்றும் கூறி ஏஆர் ரஹ்மான் பரபரப்பை ஏற்படுத்தினார் 
 
இந்த நிலையில் ரகுமானின் கருத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் பாஜக பிரமுகர் சேகர் இது குறித்து தெரிவித்த போதும் தம்பி ஏ ஆர் ரகுமான் முதலில் தனது குடும்பத்தார் பெயரை தமிழில் மாற்றட்டும் என்றும் அவரது குடும்பத்தினர் பெயர் உருதில் தான் இருக்கிறது என்றும் கூறினார் 
 
மேலும் குறைந்தது ஐந்து மாநிலங்களில் ஆவது இந்திக்கு பதிலாக தமிழ் கற்பிக்க ஏஆர் ரகுமான் நிதி ஒதுக்கீடு செய்ய உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்