தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர் எம் எஸ் பாஸ்கர். பின்னர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் அபிமானத்தைப் பெற்றார். இப்போது திரையுலகின் முன்னணிக் கலைஞராக இருக்கும் பாஸ்கர் சமீபத்தில் நடித்த டாணாகாரன் திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது.