ஜெயலலிதா இட்லிக்கு மட்டுமல்ல, இதற்கும் சேர்த்துதான் ரூ.1.17 கோடி

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (08:32 IST)
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களில் அவருடைய உணவு செலவு மட்டும் ரூ.1.17 கோடி  என அப்பல்லோ தகவல் அளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா சாப்பிட்ட ஒரே ஒரு இட்லிக்கு ரூ.1.17 கோடியா என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் நிலையில் இதுகுறித்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உணவுச்செலவு ரூ.1.17 கோடி என்பது ஜெயலலிதா சாப்பிட்ட உணவுக்கு மட்டுமல்ல. அவரை பார்க்க வந்தவர்கள், காவலில் இருந்த போலீஸ்காரர்கள், செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள், விவிஐபிக்கள் ஜெயலலிதாவை பார்க்க வந்தபோது வழங்கப்பட்ட உணவுகள், சசிகலா குடும்பத்தினர் 75 நாட்களும் தங்கியிருந்தபோது கொடுத்த உணவுப்பொருட்கள் ஆகிய அனைத்திற்கும் சேர்த்துதான் ரூ.1.17 கோடி உணவு செலவு என குறிப்பிடப்பட்டுள்ளதாக தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கு மட்டும் 48.43 லட்சம் உணவுக்காக செலவு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்ததை பத்திரிகையாளர்கள் மறுத்துள்ளனர். பத்திரிகையாளர்கள் யாரையும் அப்பல்லோ மருத்துவமனையின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் யாருக்கும் எந்த உணவும் அப்பல்லோ மருத்துவமனை வழங்கவில்லை என்றும் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்