மீடியாக்கு மட்டுமே 48 லட்சம் செலவு: அப்பல்லோ கணக்கு உண்மையா? பொய்யா?
புதன், 19 டிசம்பர் 2018 (15:40 IST)
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது சாப்பாட்டு செலவு மட்டும் ஒரு கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூபாய் செலவாகியதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்து அதிர்ச்சி கொடுத்தது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறப்பட்டு இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தில்தான் அப்பல்லோநிர்வாகம் இந்த கணக்கை சமர்பித்து அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அப்பல்லோ மருத்துவமனை வழங்கிய உணவு செலவு கணக்கு எதற்காகவெல்லாம் செலவிடப்பட்டது என்று பிரித்து ஒரு புது லிஸ்டை சமர்பித்துள்ளது.
இந்த லிஸ்ட் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், மருத்துவமனை முன்பு குவிந்திருந்த மீடியா ஆட்களின் உணவுக்கு ரூ.48.43 லட்சம் செலவிடப்பட்டதாம்.
ஆனால், இதில் கடுகளவும் உண்மையில்லை. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு அப்பல்லோ நிர்வாகம் சார்ப்பில் உணவு வழங்கப்படவில்லை. பத்திரிக்கையாளர்கள் பக்கத்தில் இருந்த ஹோட்டலில் உணவு அருந்தினர் என்பதே உண்மை.