விரைவில் அண்ணாமலையும் கவர்னராகிவிடுவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆரூடம்

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (08:29 IST)
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மற்றும் புதுவை மாநிலங்களுக்கு கவர்னராகிவிட்ட நிலையில் விரைவில் அண்ணாமலை அந்தமான் தீவுக்கு கவர்னராகிவிடுவார் என  ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார் 
 
அந்தமான் தீவுகள் கவர்னராக வேண்டும் என்பதற்காகவே அண்ணாமலை கடந்த சில மாதங்களாக திமுகவை கடுமையாக தாக்கி பேசி வருகிறார் என்றும், இதனை அடுத்து அவரது சத்தமான பேச்சுக்கு பரிசாக விரைவில் மோடி அவருக்கு அந்தமான் கவர்னர் பதவியை கொடுப்பார் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்
 
மேலும் 150 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தமிழக மக்கள் பாஜகவை உள்ளே விட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்