தமிழக அமைச்சர்களில் பதினோரு அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை தெரிவித்துள்ளார்.
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த புகாரில் ஒரு அமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் சிஏஜி அறிக்கை விவரங்களை தவறாக குறிப்பிட்டு திமுக தன்னை தானே தாழ்த்துகிறது என்று கூறியுள்ளார்.
11 விதமான ஊழல் பட்டியலை அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இந்த ஒவ்வொரு ஊழல் பட்டியிலும் ஒரு அமைச்சர் தொடர்பில் இருக்கிறார் என்றும் அந்த அமைச்சர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர்கள் மீதான வழக்குகள் குறித்த விஷயங்களை திசை திருப்புவதற்காகவே முதல்வரின் மகன் உள்பட திமுகவினர் சனாதனத்தை கையில் எடுத்துள்ளனர் என்றும் அவர் குற்றச்சாட்டி உள்ளார்.