கொங்கு மண்டலம் யாருக்கு என்பதை ஜூன் 4ல் பார்த்துவிடலாம்: அண்ணாமலை

Mahendran
வியாழன், 11 ஏப்ரல் 2024 (13:46 IST)
கொங்கு மண்டலம் யாருக்கு என்பதை ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவு வெளியாகும் தேதியில் பார்த்துக் கொள்ளலாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளது நரி அந்த பழம் புளிக்கிறது என்ற கதை போல் உள்ளது என்றும் அதிமுக தலைவர்கள் வீதிக்கு வந்து மக்களை பார்க்க வேண்டும் என்றும் ஆனால் அவர்கள் வர மாட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரியும் என்று கூறினார்
 
 தமிழகத்தை பொறுத்த வரை திமுக பாஜக இடையே தான் போட்டி என்றும், இந்த இரண்டு கட்சிகள் தான் தற்போது ஆட்சியில் உள்ளன என்றும் அப்படி என்றால் இரண்டு கட்சிகள் இடையே தானே போட்டி என்றும் அவர் தெரிவித்தார் 
 
பாஜகவில் சமூக விரோதிகள் இருக்கிறார்கள் என்று டிஆர்பி ராஜா பேசியது சமூக விரோதியின் மகனாக இருந்து கொண்டு பேசுவது நகைச்சுக்கு உரியது என்றும் அவர் கூறினார்.
 
 மேலும் ஜும் நான்காம் தேதி கொங்கு மண்டலம் யாருக்கு என்பதை பார்த்து விடலாம் என்றும் பண அரசியலை கோவையில் இருந்து ஒழிக்க முடியும் என்பது என்னுடைய தீர்க்கமான நம்பிக்கை என்றும் அவர் கூறினார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்