அண்ணா பல்கலை. விவகாரம்! சீமான் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு! - தடையை மீறுமா நாதக?

Prasanth Karthick
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (09:16 IST)

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி இன்று நடத்த இருந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


 


 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவிக்கு நீதி வழங்க கோரியும், திமுகவை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

 

தொடர்ந்து நேற்று அதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்த முயன்றதால் கைது செய்யப்பட்டனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அண்ணா பல்கலைக்கழக சம்பவம் குறித்து வெளியிட்ட அறிக்கையை தவெக தொண்டர்கள் விநியோகித்த நிலையில் அவர்களும், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தும் கைது செய்யப்பட்டார். 
 

ALSO READ: சென்னையில் ரூ.16 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்! 5 பேர் கைது!

 

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் அண்ணா பல்கலை விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டாலும் போராட்டம் நடத்த நா.த.க தயாராக உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளது.

 

தொடர்ந்து அண்ணா பல்கலை விவகாரத்தில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நாம் தமிழர் கட்சி நடத்த உள்ள ஆர்ப்பாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்