அப்போது, "சீமான் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பல பேட்டிகளில், பொதுக்கூட்டங்களில், சமூக வலைதளங்களில் அவதூராக பேசியுள்ளார்" என்றும் "தனிப்பட்ட விதத்தில் மிரட்டுவதால் தங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்" என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அருண்குமார், "சீமான் தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்க தொழிலதிபர் மூலம் தூது விட்டார், ஆனால் நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை" என்றும் "பொது வெளியில் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தால், கோர்ட்டில் அதை தெரிவிக்கப்படும்" என்றும் கூறினார்.