ஆளுநர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு..!

Siva
புதன், 13 மார்ச் 2024 (11:52 IST)
ஆளுநர் கலந்து கொள்ளும் பட்டமளிப்பு  விழாவை ஏற்கனவே ஒரு சில அமைச்சர்கள் புறக்கணித்த நிலையில் தற்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆளுநர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
சென்னை வேப்பெறியில் நடைபெறும் கால்நடை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெறும் நிலையில் இந்த விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்பதாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில் கால்நடை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ஆளுநர் ரவி வந்துள்ள நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இந்த விழாவை புறக்கணித்து விட்டதாக புறப்படுகிறது.
 
 இந்த பட்டமளிப்பு விழாவில் 1166 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்ட உள்ளதாகவும் ஆளுநர் ரவியே இந்த விழாவை முழுமையாக நடத்தி பட்டங்களை அளிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏன் புறக்கணித்தார் என்ற தகவல் தெரியவில்லை என்றாலும் இந்த விழாவை அவர் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்