அய்யா வைகுண்டர் பத்தி தெரியாம எதையாவது பேசக் கூடாது! – ஆளுநர் ரவிக்கு தலைமைபதி கண்டனம்!

Prasanth Karthick

செவ்வாய், 5 மார்ச் 2024 (12:40 IST)
சமீபத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அய்யா வைகுண்ட குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில் அதுகுறித்து அய்யாவழி தலைமைபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.



சமீபத்தில் நடைபெற்ற மகாவிஷ்ணு அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாறு என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த நிகழ்ச்சியில், சனாதன தர்மத்திற்கு அச்சுறுத்தல் இருந்த காலத்தில் பிறந்த அய்யா வைகுண்டர் சனாதனத்தை காக்கவே தோன்றியதாக பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பேசியுள்ள அய்யாவழி தலைமபதி நிர்வாகி பால பிரஜாபதி “சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி அய்யா வைகுண்டர் குறித்தும், இன்னும் சில வெள்ளைக்கார அதிகாரிகள் குறித்தும் பேசிய வீடியோவை காண நேர்ந்தது. அய்யா வைகுண்டர் சனாதனத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர். சமத்துவத்தை நிலைநாட்டியவர். வரலாறு தெரியாமல் யாரும் வாய் திறக்கக் கூடாது. அய்யாவழி மக்களுக்கு பூஜை, புணஸ்காரம், உருவ வழிபாடுகள் கிடையாது என 10 நெறிமுறைகள் உள்ளது. பெண்களும் ஆன்மீக பணியாற்றலாம் என்றவர் அய்யா வைகுண்டர். அவர் சனாதனத்தை காக்க வந்தவர் அல்ல. மக்களை காக்க வந்தவர். அறியாமையை போக்க வந்தவர். மனுதர்மத்தை நீக்கி சாதி பாகுபாடுகளை நீக்க வந்தவரை காக்க வந்தவர் என திரிப்பது தவறு. எல்லாவற்றையும் தனதாக்கி பட்டா போடும் செயலை ஆளுநர் செய்யக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்