கிரிக்கெட் பேட் கேட்டு உதயநிதி ஸ்டாலினிடம் சிறுவர்கள் “மனு

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (17:27 IST)
கிரிக்கெட் பேட் கேட்டு உதயநிதி ஸ்டாலினிடம் சிறுவர்கள் மனு
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு பக்கமும், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பக்கமும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்
 
அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தாலும் உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று தேர்தல் பிரசாரத்துக்காக ஆண்டிபட்டி வந்திருந்த உதயநிதியிடம் திடீரென சிறுவர்கள் சூழ்ந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். உதயநிதி ஸ்டாலின் அந்த கோரிக்கை மனுவை எடுத்து படித்து பார்த்த போது தங்களுக்கு கிரிக்கெட் பேட் வேண்டும் என்று அந்த மனுவில் சிறுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
இதனை அடுத்து காரிலிருந்து இறங்கிய உதயநிதி சிறுவர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டதோடு கண்டிப்பாக கிரிக்கெட் பேட் வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். மேலும் சிறுவர்களுடன் உதயநிதி எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்