காரணம், இவர் தற்போது நடைபெற்று வரும் 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 2011 – 2016 ஆண்டுகளில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக 4 ¾ ஆண்டுகளாகவும், அதிமுக கட்சியின் கரூர் மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். மேலும் 2006 – 2011 ம் திமுக ஆட்சியில் கரூர் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ வாக இருந்து திமுக கட்சி மற்றும் திமுக ஆட்சியின் மணல் கொள்ளை, சட்டவிரோத பணிகளை எடுத்து கூறி வன்முறை ஏற்பட்டு அதிமுக கட்சியில் இருந்து சிறை சென்றவரும் ஆவார். திடீரென்று ஜெயலலிதாவின் மறைவு, அதிமுக கட்சி இரண்டு பட்ட போது தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு சென்று தகுதிநீக்க எம்.எல்.ஏ க்களில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ க்களில் ஒருவரும் ஆவார். இந்நிலையில், அதிமுக கட்சியில் கரூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக இருந்த இவர், சசிகலா, இளவரசி ஆகியோரை வைத்து அதிமுக வில் மாவட்ட மாணவரணி செயலாளர், மாவட்ட செயலாளர் என்ற பொறுப்புகளை பெற்ற செந்தில்பாலாஜி, தீடீரென்று அவரது கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் பதவி பறிப்பிற்கு பின்பு அவர், டி.டி.வி தினகரன் கட்சியை தேர்ந்தெடுத்து அங்கு சென்று, பின்னர் திமுக வில் சுமார் ஆயிரம் நபர்களை கொண்டு சேர்த்து திமுக கட்சியில் மாவட்ட செயலாளராகவும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் திமுக எம்.எல்.ஏ வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.