தானியங்கி மது இயந்திரத்தை நிறுத்தவில்லை என்றால் போராட்டம்: அன்புமணி எச்சரிக்கை..!

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (15:01 IST)
சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் நிறுவப்பட்டு உள்ள நிலையில் அதை நிறுத்தவில்லை என்றால் உடனடியாக போராட்டம் நடத்தப்படும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
தமிழகம் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஏராளமான மது கடைகள் இருக்கும் நிலையில் சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் புதிதாக மது வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டு உள்ளது. 
 
ஏடிஎம் மெஷின் போலவே இருக்கும் இந்த இயந்திரத்தில் தேவையான மதுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது குறித்து அவருக்கு ஒரு இருப்பதாவது:
 
சமூக நீதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் மது, தானியங்கி தொழில்நுட்ப இயந்திரம் மூலம் மது வழங்குவதை நிறுத்தவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்