மதுரை-கோவை ரயில்வே சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (15:44 IST)
மதுரை கோவை ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சற்று முன் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவை ரயில்வே கோட்டத்தில் போத்தனூர் ரயில் நிலைய பாலத்தில் இரும்பு கர்டர்களை மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. எனவே ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
இதன்படி மதியம் 12.15 மணிக்கு கோவை சென்றடையும் மதுரை - கோவை ரயில் இந்த இரண்டு நாட்களும் மதுரையிலிருந்து போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும் போத்தனூர் - கோவை இடையே ரத்து செய்யப்படும்.
அதேபோல் கோவை ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் கோவை-மதுரை ரயில் இரண்டு நாட்களுக்கு கோவைக்கு பதிலாக போத்தனூரில் இருந்து மதியம் 2.52 மணிக்கு புறப்படும்.