வாலிபர் உயிருடன் எரித்து கொலை - தேனியில் பயங்கரம்

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (12:11 IST)
தேனி மாவட்டம் போடியில் வாலிபர் ஒருவரை உயிருடன் எரித்துக்கொன்ற செய்தி அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அருகே இளைஞர் ஒருவர் உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததை அந்த வழியில் சென்ற ஒருவர் கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் எரிக்கப்பட்ட வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் சம்பவ இடத்தை ஆராய்ந்த போலீஸார் சுகாதர மையத்தின் கேட்டில் தீ பற்றி எரிந்த தடத்தை கண்டறிந்தனர். அவற்றை வைத்து வாலிபர் கேட்டில் கட்டி வைத்து எரிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்