ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிக பிரமுகரிடம் விசாரணை; அதிர்ச்சி தகவல்..!

Siva
ஞாயிறு, 21 ஜூலை 2024 (11:27 IST)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே அதிமுக, திமுக, பாஜகவை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தேமுதிக பிரமுகர் இடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை தொடர்பாக 11 பேர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நான் அதிமுகவை சேர்ந்த ஹரிஹரன், பாஜகவை சேர்ந்த அஞ்சலை உள்பட ஒரு சில அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் தற்போது தேமுதிக பிரமுகர் மணிகண்டன் என்பவரிடம் இந்த கொலை சம்பந்தமாக விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட அருள், ஹரிஹரன் ஆகியோர்களுடன் மணிகண்டன் தொடர்பில் இருந்ததாகவும் இதனால் அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. மேலும் திருவள்ளூரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பிரபாகரன்,  வேலாயுதம் உள்பட 5 பேரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்