அமமுக செயற்குழு கூட்டம் திடீர் தள்ளிவைப்பு.. புதிய தேதி அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (11:25 IST)
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் ஜூன் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூன் 7ஆம் தேதி நடைபெற இருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் ஜூன் 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். 
 
மேலும் அனைத்து கழக செயற்குழு உறுப்பினர்களும் தங்களுடைய அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 
இந்த செயற்குழு கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்