அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் சோதனை: முதன்மை கல்வி அலுவலர்

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (21:29 IST)
மதுரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் சோதனை செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மதுரையில் தற்போது வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்தே முதன்மை கல்வி அலுவலர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 
 
மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் மதுரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கட்டாயம் என்றும் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்
 
மேலும் மாணவர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் அவரை தனிமைப்படுத்தி பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்