நவ்.3 அனைத்து கட்சி கூட்டம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (11:42 IST)
நவம்பர் 3 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அழைப்பு விடுத்துள்ளார். 
 
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட உள்ளது. எனவே வரும் ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இது குறித்த ஆலோசனை வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அழைப்பு விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்