தமிழக மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்! – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி!

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (14:52 IST)
சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை பார்வையிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களுக்கு தேவையான உதவியை பிரதமர் மோடி செய்து தருவார் என உறுதி அளித்துள்ளார்.



சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களி மிக்ஜாம் காரணமாக ஏற்பட்ட கனமழையால் பல பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளித்து வருகிறது. மீட்பு பணிகளும், மக்களுக்கான அடிப்படை வசதிகளும் தொடர்ந்து செய்து கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மிக்ஜாம் மழை சேதங்களை சரி செய்ய ரூ.5020 கோடி இடைக்கால நிவாரணமாக வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலமாக பயணித்து சென்னையில் வெள்ளம் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

பின்னர் தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலினோடு கலந்து கொண்ட அவர், தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தரும்படி பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் அந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் இடைக்கால நிவாரணமாக தற்போது மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.450 கோடியும், இரண்டாவது கட்டமாக ரூ.450 கோடியும் என இதுவரை ரூ.900 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth,K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்