வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.7500 உதவித்தொகை! அதிரடி அறிவிப்பு

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (19:46 IST)
வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.7500 உதவித்தொகை வழங்கப்படும் என ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியா அரசு தெரிவித்துள்ளது அந்நாட்டு இளைஞர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் வேலை இல்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். இந்த நிலையில் வேலையில்லாமல் வறுமையில் வாடும் இளைஞர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அந்நாட்டின் அதிபர் அறிவித்துள்ளார்
 
வேலை இல்லாதவர்களும் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்றும் அதற்காகவே இந்த உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் அது மட்டுமின்றி மருத்துவ காப்பீடும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வழங்கப்படும் என்றும் அல்ஜீரிய அதிபர் அறிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்