இந்தி தான் நமது நாட்டின் தாய் மொழி மற்றும் தேசிய மொழி: பிரபல நடிகர்

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (18:52 IST)
இந்திதான் நமது நாட்டின் மொழி என்றும் தேசிய மொழி என்றும் பிரபல நடிகர் அஜய் தேவ்கான் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் படத்துக்கு இந்தியில் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார் அஜய்தேவ்கான்
 
 இந்த வாழ்த்துக்கு கருத்து தெரிவித்த கிச்சா சுதீப் எனக்கு ஹிந்தி தெரியாது என்றும் அனைவருக்கும் தெரிந்த மொழியில் வாழ்த்து தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார் 
 
இதற்கு பதிலளித்துள்ள அஜய் தேவ்கன் ஹிந்தி தான் நமது நாட்டின் தாய்மொழி மற்றும் தேசிய மொழி என்றும் இந்தி தேசிய மொழி இல்லை என்றால் கன்னட நடிகர் உங்களுடைய படங்கள் இந்தி மொழியில் ஏன் வெளியிட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்