எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக.....

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (20:55 IST)
திருச்சி, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது அதிமுக.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் 7 வாக்குச்சாவடிகளில் மட்டும் மட்டும்  நேற்று  தேர்தல் நடந் நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில், ஆளுங்கட்சியாக திமுகவினர் அதிகப்படியாக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், திருச்சி மாநகராட்சியில் 2 வார்டுகளில் மட்டுமே வென்று 3 வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டுவதால் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கு திமுக 42 இடங்களிலும், காங்கிரஸ் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

அதிமுகவின் கோட்டையாக விளங்கிய கோவையிலும், திமுக 42 இடங்களிலும், காங்கிரஸ் 5 வார்டுகளிலும், அதிமுக 2 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.

மேலும், தேனியில் 22 பேரூராட்சிகளில் சுமார் 19 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது.
 
அதேபோல் தமிழகத்தில் 200 வார்டுகளைக் கொண்ட மிகப்பெரிய மாநகராட்சியான சென்னையில் திமுக 146 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்