அதிமுக பொதுக்குழு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (14:39 IST)
அதிமுக பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளதாகவும், இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
 
சமீபத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்ற நிலையில் இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது
 
இந்த வழக்கின் விசாரணையின்போது 23 தீர்மானங்களை மட்டுமே அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டும் என்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது 
 
இந்த நிலையில் அதிமுக பொதுக் குழுவில் 31 தீர்மானங்கள் ரத்து செய்யப்படுவதாக அதிமுக பொதுக்குழு தீர்மானம் இயற்றியது
 
இதனை அடுத்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்