பல நாட்களுக்குப் பிறகு ’இறைச்சி’ பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி…

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (18:41 IST)
கடந்த 17 ஆம்தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த 2100 கிலோ இறைச்சியை எடுக்க ஆட்கள் யாருமின்றி அநாதையாக கிடந்தது. எனவே அது சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல்களுக்கு பிரியாணிக்காகத்தான் வந்ததாக வதந்தி பரவியது.

இந்த இறைச்சி கெட்டுப்போயிருந்ததால் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் இது ஆட்டுக்கறியா, மாட்டுக்கறியா, நாய் கறியா, மான் கறியா என முடிவு செய்ய முடியாமல் இருந்தனர்.

இறைச்சியில் வால் நீண்டிருந்ததால் அது நாய் கறி என்று பெரும்பாலான மக்கள் நம்பினர்.பின் அந்த கெட்டுப்போன இறைச்சி எந்த ஹோட்டல்களூக்கு வந்துள்ளது என கண்டறிய ரயில்வே போலீஸ் ஜோத்பூருக்கு சென்றனர்.

மேலும் அது சென்னையில் உள்ள கால்நடை மருத்துவனை பேராசிரியர்களிடம் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இன்று ஆய்வின் முடிவுகள் வெளியானது. அதில் சென்னின் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த இறைச்சி ஆட்டு இறைச்சிதான் எனபதை கால்நடை பேராசிரியர்கள் உறுதிசெய்துள்ளனர்.

இதனால் கடந்த சில நாட்களாக இறைச்சி குறித்த குழப்பம் நீங்கியது. ஆயினுன் செட்டுப்போன இறைச்சியை யார் யாருக்கு அனுப்பியது ..?என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகளை ரயில்வே போலிஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்