உள்ளாட்சி தேர்தல்: கல்லூரி மாணவியை அடுத்து பட்டதாரி இளம்பெண் வெற்றி!

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2020 (22:25 IST)
உள்ளாட்சி தேர்தலில் 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் வெற்றி பெற்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் தற்போது மேலும் 22 வயது பட்டதாரி இளம்பெண் வெற்றி பெற்றுள்லார்.
 
கிருஷ்ணகிரியை அடுஹ்த கே.என். தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி வெற்றி பெற்றதை அடுத்து கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
 
இந்த நிலையில் திருவாரூர் பகுதியி 22 வயது பட்டதாரி பெண் ஒருவர் வெற்றி பெற்று ஊராட்சி மன்றத் தலைவராகியுள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 22 வயது பிபிஏ பட்டதாரி ஆர்.சுபிதா என்பவர் போட்டியிட்டார். இவர் தேர்தலில் வெற்றி பெற்றதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார் இளைஞர்கள் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்று பதவியையும் பிடிப்பது ஆரோக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்