சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

Mahendran

திங்கள், 20 மே 2024 (10:53 IST)
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும் என்று சமீபத்தில் பேட்டி அளித்த சமாதிவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் லஞ்ச ஒழிப்பு துறை செயல்பட்டு வருகிறது என்றும் தேவைப்பட்டால் அந்தத் துறையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.
 
மேலும் தேசிய அளவில் உள்ள சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் கட்சிகளை உடைக்கவும் தவறாக பயன்படுத்துவதன் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டு வருகிறது என்றும் எனவே இந்த இரண்டு துறைகளையும் ஒழிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
எனவே சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இனி இந்தியாவுக்கு தேவை இல்லை என்று எனக்கு தோன்றுகிறது என்றும் அவற்றை தாராளமாக இழுத்து மூடு விடலாம் என்றும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இதை நான் பரிந்துரை செய்வேன் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 
 
தேர்தல் பத்திரம் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகள் ஊழல் செய்யப்பட்டது என்றும் அந்த ஊழல் குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் மீது மட்டுமே விசாரணை செய்ய இந்த இரண்டு துறைகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்