உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

Prasanth Karthick

திங்கள், 20 மே 2024 (11:30 IST)
பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற பலரும் ஆய்வுகள் செய்து பல ஆண்டு முயற்சிக்கு பின் டாக்டர் பட்டம் பெறும் நிலையில் ஒரு பூனைக்கு பல்கலைக்கழகம் ஒன்றில் டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.



டாக்டர் பட்டம் என்பது பலரையும் வசீகரிக்கும் ஒன்றாக உள்ளது. பொதுவாக ஒரு துறையில் முனைவர் ஆய்வுகள் மேற்கொண்டு பல ஆண்டுகள் ஆய்வு செய்து பலரும் டாக்டர் பட்டத்தை பெறுகின்றனர். டாக்டர் பட்டம் மேல் ஆசைக் கொண்ட ஆனால் ஆய்வு செய்ய இயலாத சில தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் மேலும் சிலரும் கூட பல்கலைக்கழகங்களில் கௌரவ டாக்டர் பட்டத்தை எப்படியோ பெற்றுக் கொள்கின்றனர்.

இப்படியான டாக்டர் பட்டத்தை அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று ஒரு பூனைக்கு கொடுத்திருப்பதுதான் பலருக்கும் ஆச்சர்யம். அமெரிக்காவில் உள்ள வெர்மாண்ட் மாநில பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மேக்ஸ் என்ற பூனை கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகிறது.



பொதுவாக பூனைகள் மனிதர்களின் ஆணைக்கு கட்டுப்படாமல் இஷ்டத்திற்கு திரிபவை. விரும்பினால் மட்டுமே மனிதர்களிடம் குலாவும். ஆனால் இந்த மேக்ஸ் அங்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் நட்புணர்வுடன் பழகியதாம். மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குப்பைத்தொட்டிகளை பராமரிக்கவும் ஊழியர்களுக்கு உதவிகள் செய்ததாம்.

பல்கலைக்கழகத்திற்கு மேக்ஸ் செய்து வரும் உதவிகளை பாராட்டி அதற்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது வெர்மாண்ட் மாநில பல்கலைக்கழகம். இப்போதெல்லாம் பல்கலைக்கழக மாணவர்கள் அந்த பூனையை வெறுமனே ‘மேக்ஸ்’ என கூப்பிடாமல், ‘டாக்டர் மேக்ஸ்’ என்றுதான் கூப்பிடுகிறார்களாம்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்