கருங்காலி மாலைக்கு செம கிராக்கி.. புதுசா உள்ளே வந்த செங்காலி மாலை!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (12:33 IST)
சமீப காலமாக கருங்காலி மாலைகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில் அதற்கு போட்டியாக சந்தையில் செங்காலி மாலைகள் களம் இறங்கியுள்ளன.



இந்து மத சம்பிரதாயப்படி துளசி மாலை, ருத்திராட்ச மாலை, கருங்காலி மாலை என பல வகை மாலைகளை மக்கள் அணிகின்றனர். இந்த மாலைகளால் வெவ்வேறு நன்மைகள் விளையும் என சொல்லப்படுகிறது. சமீபமாக கருங்காலி மரத்திலிருந்து செய்யப்படும் மாலைகள் பண வரவை அதிகரிக்கும், செல்வம் சேர உதவும் என சமூக வலைதளங்களில் தொடர்ந்து விளம்பரப்படுத்தப்பட்டு வருவதால் அதற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.

இதை பயன்படுத்தி பலரும் கருங்காலி மாலைகளை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது இதுபோன்ற மாலைகளுக்கு இருக்கும் டிமாண்டை பார்த்து சந்தையில் புதிதாக செங்காலி மாலைகளும் வர தொடங்கியுள்ளன. கருங்காலி மாலைகளை விட செங்காலி மாலைகள் சற்று விலை குறைவு என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் பலரும் அந்த மாலைகளை வாங்கி அணிய விருப்பம் காட்டி வருகின்றனர்.

மேலும் செங்காலி மாலைகள் பைரவமூர்த்தி, முருகபெருமானுக்கு உகந்தவை என்று கூறப்படுவதால் இந்த கார்த்திகை மாத சீசனில் இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்