நிர்மலா தேவி வழக்கு: இருவர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும: வழக்கறிஞர்

Mahendran
திங்கள், 29 ஏப்ரல் 2024 (15:56 IST)
பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் 2 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும், பிறழ் சாட்சிகள் காரணமாக 2 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் நிர்மலா தேவி தரப்பு விளக்கத்தை இன்றே கேட்டு இன்றே தண்டனை வழங்க வேண்டும் என்று முறையிட்டுள்ளோம் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள  தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்த நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்த நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி அவரை கைது செய்தனர். 
 
இந்த வழக்கில் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவராக இருந்த கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு சில ஆண்டுகளாக நடந்தது.
 
இந்நிலையில் இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நிர்மலாதேவி குற்றவாளி என  நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்ட நிலையில் நிர்மலாதேவி தண்டனை விவரம் குறித்து நாளை அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்