தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல்: பாஜக நிர்வாகிக்கு ஜாமின் மறுப்பு

Mahenran
திங்கள், 29 ஏப்ரல் 2024 (15:51 IST)
தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான பாஜக நிர்வாகியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டடு.
 
பாஜக நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனுவை ஏற்கனவே ட தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தற்போது 2வது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன்னை கைது செய்துள்ளனர் என மனுதாரர் தரப்பு வாதிட்ட நிலையில் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சில குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளதால் ஜாமின் வழங்க கூடாது என  காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அகோரத்தின் ஜாமின் மனுவை  சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதினத்தின் 27-வது தலைமை மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் குறித்த ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாக கூறி வினோத், செந்தில், விக்னேஷ் ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்ததாக ஆதீனத்தின் உதவியாளர் காவல்துறையில் புகார் அளித்தார். 
 
இந்த புகாரின் அடிப்படையில் செம்பனார்கோவிலை சேர்ந்த தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க தலைவர் அகோரம், மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து அதன்பின் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahenran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்