தியாகத் தலைவி சின்னம்மா!! அதிமுகவினர் கலக்கல் போஸ்டர்

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (11:31 IST)
சசிக்கலா விடுதலைக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் சசிக்கலா விடுதலைக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த போஸ்டரில், 33 ஆண்டுகள் டாக்டர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவோடு தவ வாழ்க்கை வாழ்ந்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக என்று எழுதப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்