அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார்: ஓபிஎஸ்-க்கு பின்னடைவு..!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (14:57 IST)
அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் இன்று பாஜகவில் இணைந்ததாக வெளிவந்திருக்கும் செய்தியை அடுத்து ஓபிஎஸ் மீண்டும் பின்னடைவு என்று கூறப்படுகிறது. 
 
முன்னாள் அதிமுக எம்பி மைத்ரேயன் அதிமுக இரண்டாக பிரிந்த போது ஓபிஎஸ் அணியின் ஆதரவாளராக இருந்தார். இதனை அடுத்து அதிமுகவிலிருந்து மைத்ரேயன் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் அரசியல் நடவடிக்கை எதிலும் கடந்த சில மாதங்களாக ஈடுபடாமல் அமைதி காத்து வந்த மைத்ரேயன் திடீரென இன்று பாஜகவில் இணைந்து கொண்டார். 
 
இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதிமுகவின் ஓபிஎஸ் அணியில் இருப்பவர்கள் ஒவ்வொருவராக பிரிந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்