திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் மீது தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இலவச தரிசன டிக்கெட் டோக்கன் வாங்குவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட மேலும் சிலர் காயமடைந்திருப்பதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஆறு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தேவஸ்தான நிர்வாகம் மீது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருப்பதாகவும், அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.