இந்த அவமானம் தேவையா? கர்நாடகத்தில் அதிமுக பெற்ற ஓட்டுக்கள்

Webdunia
புதன், 16 மே 2018 (07:15 IST)
கடந்த 12ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது அம்மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வலிமையான வேட்பாளர்களை நிறுத்தி ஆட்சியை பிடிக்க திட்டமிட்டன.
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் அதிமுக இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது. அதிமுக தலைவர்கள் சிலர் பிரச்சாரத்திற்கும் சென்றனர். தமிழத்தில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலேயே ஒரு சுயேட்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்த அதிமுகவுக்கு கர்நாடக தேர்தலில் போட்டியிடுவது தேவையா? என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்தனர்.
 
இந்த நிலையில் கர்நாடகத்தில் அதிமுக வேட்பாளர்கள் 50 மற்றும் 227 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர். ஹனூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விஷ்ணுகுமார் 50 வாக்குகளும், காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட யுவராஜ் 227 வாக்குகளும் பெற்று இருவருமே டெபாசிட் இழந்துள்ளனர். இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு அசிங்கப்பட்டுள்ள அதிமுகவை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்