ஒரு கட்டத்தில் பாஜக 120 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்றதால் அக்கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் எடியூரப்பா முதல்வர் பதவியை வரும் 17ஆம் தேதி ஏற்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக தற்போது பாஜகவுக்கு 104 இடங்கள் மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது. ஆனால் காங்கிரஸ் மற்றும் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் இணைந்து 117 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் சற்றுமுன்னர் குமாரசாமி, சித்தராமையா மற்றும் காங்கிரஸ், ம.ஜ.த. கட்சி தலைவர்கள் கூட்டாக கர்நாடக மாநில ஆளுனரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது ஆட்சியமைக்க 111 பேர் தேவை என்ற நிலையில் தங்கள் அணியில் 117 பேர் உள்ளதாக ஆளுனரிடம் எடுத்து கூறியுள்ளனர். இதனால் இந்த அணியை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது